முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் தன் மதத்தை சார்ந்த தனி நபருக்கு சாதகமாக செயல்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்!

 ஷ்யாம் நீயூஸ் 31.01.2022 தூத்துக்குடியில் தன் மதத்தை சார்ந்த தனி நபருக்கு சாதகமாக செயல்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளை  எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகிலுள்ள பெரியநாயகிபுரத்தை சார்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர். பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் சுடலைமாடசுவாமி கோவில் கோரம்பள்ளம் பாளையம்கோட்டை ரோடு அருகில் உள்ளது . இக்கோயிலில்  ஊர் பொது மக்களால் வரிவசூல் செய்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் கொடை,திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர் .இந்த நிலையில் தற்போது கோயில் இருக்கும் இடம் மதிப்பு அதிகமாகி விட்ட காரணத்தால் சென்னையை சேர்ந்த  சாம் தேவதாசன் என்பவர் போலி பத்திரம் போட்டு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இது சம்மந்தமாக   தூத்துக்குடி கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த தாசில்தார் போலிப் பத்திரம் வைத்துள்ள சாம் தேவதாசனுக்கு ஆதரவாக  செயல்படலாம் என்றும் கோவில் நிலத்தை அபகரித்து தனது மதத...

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் அனுப்புவதில் முறைகேடு!

 ஷ்யாம் நீயூஸ் 25.01.2022 தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் அனுப்புவதில் முறைகேடு? தூத்துக்குடி மாவட்டத்தில் 152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன இந்த விற்பனை கடைகளுக்கு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை ஒட்டி மது பான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்துதான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இங்கு பணிபுரியும் மகேஷ் என்பவர் 152 கடைகளுக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் என வசூல் செய்கிறார் மாதம் குறைந்த பட்சம் 1.52 லட்சம் ஊழியர்களை மிரட்டி பணம் வாங்குகிறார்  என்று  டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர். மற்றும் பணம் தறாத டாஸ்மாக் விற்பனை கடைகளுக்கு மது அருந்துபவர் விரும்பி அருந்தும் மது புட்டிகளை அனுப்புவதில்லை அல்லது பெயர் அளவுக்கு குறைவான அளவில் மட்டுமே அனுப்புகிறார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது  மற்றும் கடைகளுக்கு மது அருந்துவோர் அதிகம் விரும்பி உண்ணும் மதுபானங்களை அனுப்புவதில்லை மற்றும்  குவாட்டர் பாட்டில்களுக்குப் பதிலாக ஆப் பாட்டில், ஃபுல் பாட்டில்களை அனுப்பி இருப்பதாக...

நாசரேத் திருமண்டல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு

ஷ்யாம் நீயூஸ் 12.01.2022 நாசரேத் திருமண்டல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு!  அரசு உதவிபெறும் பள்ளிகளில் யார் தாளாளர் என்ற போட்டியால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற்ற டி எஸ் எப் அணியினர் ஒரு கரஸ்பாண்டன்ட் நியமித்தனர் இதற்குப் போட்டியாக தோல்வியடைந்த எஸ் டி கே அணியை சார்ந்த ஒருவருக்கு கரஸ்பாண்டன்ஸ் பதவியை வழங்கியுள்ளார் பேராயர் தேவசகாயம். இதனால் மாவட்ட கல்வி அலுவலகம் யார் கரஸ்பாண்டன் என்று புரியாமல் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர் நாசரேத் திருமண்டல த்தில் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் மற்றும் கல்வி நிலையங்களில் இரண்டு கரஸ்பாண்டன்ஸ் உள்ளதால் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்று தெரியாமல் நிர்வாகம் திணறி வருகிறது தேர்தலில் தோல்வி அடைந்த எஸ் டி கே ராஜன் அணியுடன் உடன் சேர்ந்து பேராயர் தேவசகாயம்  வெற்றி பெற்ற டி எஸ் எப் அணியினருக்கு இடைஞ்சல் கொடுத்து வருகிறார் இதனால் திரு மண்டலத்தின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்கள் தணிக்கை செய்ய முடியாமல...

தூத்துக்குடி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் ஆணையர் சாருஸ்ரீ.

 ஷ்யாம் நீயூஸ் 05.01.2022 தூத்துக்குடி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்  ஆணையர் சாருஸ்ரீ. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக 18, 19 ஆண்டுகளுக்கு உட்பட்ட 2021 டிசம்பர் 31 வரையிலான வாக்காளர் திருத்தப் பட்டியலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கினார் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் 2,89,087 உள்ளனர் இதில் 1,47,993 பெண் வாக்காளர்கள் 1,41,024 ஆண் வாக்காளர்கள் மற்றும் 70 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.இந்த வாக்காளர் பட்டியல்  மாநகராட்சிக்கு உட்பட்ட 283 வாக்குச்சாவடி களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார் .

ஆதரவற்ற நரிக்குறவ முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் !ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

 ஷ்யாம் நீயூஸ் 03.01.2022 ஆதரவற்ற நரிக்குறவ முதியவர்களுக்கு உதவித்தொகை  வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ்  ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு! தமிழக அரசு  முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது குடியிருக்க இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வரும் நரிக்குறவர்  மக்களுக்கு திமுக அரசு பல உதவிகளை செய்து வருகிறது . தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற நரிக்குறவ சமூக முதியவர்களை கண்டறிந்து1. அலிபாபா(68)2. ஜெயா(71)3. பங்குனி உத்திரம் (72) 4. காமராஜன்(69)ஆகி வர்களுக்கு  உதவித்தொகை பெறும் ஆணையை வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட முதியவர்கள் கண்ணீர் மல்க ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து உதவித்தொகை வழங்கிய ஆட்சியருக்கு தூத்துக்குடி சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.