ஷ்யாம் நியூஸ்
10.06.2021
டாஸ்மாக் பணியாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த ஏ ஐ டி யூ சி தொழிலாளர் சங்கம் கோரிக்கை !
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மாவட்ட அலுவலகத்தில் முகாம் அமைத்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் தடுப்பூசி போட ஆவண செய்ய வேண்டும் குடோன் பணியாளர்களை என டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் சங்கம் நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளது .அந்த மனுவில்
கையுறை முகக்கவசம் சானிடைசர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டியும் . கொரானா நோயால் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை உதவித்தொகை காலதாமதமின்றி வழங்க வேண்டியும் .
பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக கடைகளைத் திறந்து பெட்டி பெட்டியாக மது புட்டிகள் விற்பனை செய்து பணம் கையாடல் செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம் எனவே கடைகள் திறப்பதற்கு முன் ஆய்வு நடவடிக்கை யை துரித படுத்தி பணசுரன்டலை தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது . டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் சங்கம் மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஐயப்பனிடம் கோரிக்கை மனுவை அளித்தித்தார் .மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் .இதில் டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பொறுப்பாளர்கள் ராஜபாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர் .