ஷ்யாம் நியூஸ்
04.06.2021
தூத்துக்குடியில் இரு காவலர்கள் உயிர் தப்பினர் ! வேகமாக வந்து மோதிய வாகனம் !
கொரானா பெரும் தொற்றை தடுப்பதற்காக அரசு முழு ஊ ரடங்கை பிறப்பித்துள்ளது . தேவை இல்லாமல் ஊர் சுற்றுபவர்களை தடுக்கும் பொருட்டு காவல்த்துறைனர் இரவு பகல் பாராமல் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து சோதனை செய்து வருகின்றனர் .வெளியில் இருந்து நகருக்குள் வரும் முக்கியசாலை தூத்துக்குடி பாளை பைபாஸ் சாலை ஆகும் இன்று காலை 8.15 மணியளவில் நகரை நோக்கி வேகமாக வந்த பயணிகள் வேன் ஓன்று தன் கட்டுப்பாட்டை இழந்து சோதனை தடுப்பு கம்பி மீது மோதி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது . இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த இரு காவலர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர் .இந்த விபத்து குறித்து அங்கு இருந்த காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர் .