ஷ்யாம் நியூஸ்
24.06.2020
தந்தை மகன் சாவு போலிசை கண்டித்து தூத்துக்குடியில் முழு கடையடைப்பு
சாத்தான்குளத்தில் தந்தை மகன் கோவில்பட்டி கிளைசிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தை சம்பவத்தால் சாத்தான்குளம் முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை வேண்டும், அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.அதன்படி இன்று தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தான்குளம், ஆத்தூர், நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.