மாவட்ட ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் (29-01-2020) நடைபெற்றது.
காமராஜ் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திருமதி பொன்னுத்தாய் மற்றும் முனைவர் தேவராஜ், முனைவர் நாகராஜ் உள்ளிட்டோர் வழிநடத்திய இவ்விழிப்புணர்வு கருத்தமர்வில் அவசர கால பெண்கள் உதவி மைய எண் 181ன் பயன்பாடுகள் என்னென்ன என்றும், பெண்கள் பிரச்சனை மற்றும் ஆலோசனைக்கு எவ்வாறு தொடர்புகொள்வது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள் குறித்தும்* ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகி திருமதி ஷெலின் ஜார்ஜ் அவர்கள் விளக்கமளித்தார்.
இக்கருத்தமர்வில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூத்த ஆலோசகர் திருமதி பொன்னுமாரி, களப்பணியாளர்கள் திருமதி பிரியாதேவி திருமதி உமாதேவி, தொழில்நுட்ப நிர்வாகி திருமதி கவிதா லூயிஸ் உடனிருந்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் 200பேர் பங்கேற்றனர்.