தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் ஏ சி வாழ்க்கையும்! பொதுமக்களின் தூசி வாழ்க்கையும் ! கடும் கோபத்தில் மக்கள் !
SHYAM NEWS
தூத்துக்குடி
21.01.2020
தூத்துக்குடியில் கடந்த மாதம் பெய்த மழையில் தூத்துக்குடியில் உள்ள அணைத்து சாலைகளும் பழுதாகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் மக்களின் பொதுவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது . பழுதாகியுள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யாமல் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மெத்தன போக்கை கடைபிடிக்கிறார் .மற்றும் பலபகுதிகளில் இன்னமும் மழை நீர் வடியாமல் 60% மக்கள் இன்னலோடு வாழ்ந்து வருகின்றனர் .நீதிபதி குடியிருப்பு பகுதிகளில் மழை நீரை வெளியேற்றிய வேகம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் இல்லை .தூத்துக்குடி சுற்றி உள்ள சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு வாகனம் செல்லும்போது தூசு பறக்கிறது இதனால் பல நோய்களால் மக்கள் துன்பப்படுவதோடு விபத்துகளும் நடந்து வருகிறது .இதனால் ரோடு ஓரத்தில் உள்ள கடைகளில் தூசு படிந்த உணவு பண்டங்கள் விற்கப்படுகிறது இது பற்றிய எந்த கவலையும் படாமல் தூத்துக்குடி ஆணையர் அரசு கொடுத்த ஏ சி அறையில் சுகமாக இருப்பதும் அரசு கொடுத்த ஏ சி காரில் சுகமாக வந்து போவதால் தூசி காற்றை சுவாசிக்கும் பொதுமக்களின் துன்பம் ஆணையர் மற்றும் மேல் அதிகாரிகளுக்கு தெரிவது இல்லை .நலத்திட்டம் செய்வது போல் விளம்பரத்துக்கு படம் கொடுக்காமல் நலத்திட்டங்களை விரைவாக செய்து மற்றவர்களுக்கு படமாக இருக்கவேண்டும் எனவும் .மற்றும் தூத்துக்குடி புதுக்கிராம ரோட்டின் நடுவில் பலமாதங்களாக மரணக்குழி ஓன்று உள்ளது பலமுறை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் சரி செய்யப்படாமேலே உள்ளது .
யாராவது விழுந்து இறக்கவேண்டும் என காத்துஇருக்கிறதா மாநகராட்சி நிர்வாகம் ? எனவும் பொதுமக்கள் கண்டனத்துடன் வருத்தம் தெரிவித்தனர் .
தூத்துக்குடி
21.01.2020
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் ஏசி வாழ்க்கையும்! பொதுமக்களின் தூசி வாழ்க்கையும் ! கடும் கோபத்தில் மக்கள்!
யாராவது விழுந்து இறக்கவேண்டும் என காத்துஇருக்கிறதா மாநகராட்சி நிர்வாகம் ? எனவும் பொதுமக்கள் கண்டனத்துடன் வருத்தம் தெரிவித்தனர் .