ஷ்யாம் நீயூஸ் 05.12.25 ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை. ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட இளம் சிறார் நீதி குழுமம். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா(45). இவர் கல்லூரணி ஊர்த்தலைவராக இருந்துள்ளார். கடந்த 12.08.2008 அன்று கல்லூரணி ஊரில் உள்ள காளியம்மன் கோவில் கொடைவிழாவின் போது, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன் என்ற குச்சிமுருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனை சுப்பையா கண்டித்து உள்ளார். தொடர்ந்து ஊர் கூட்டத்திலும் 3 பேரையும் சுப்பையா கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், கடந்த 14.08.2008 அன்று சுப்பையா, அவரது மகன் ராஜாவுடன் குளத்தூர்-கல்லூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையா...
ஷ்யாம் நீயூஸ் 01.12.25 காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது. டாஸ்மாக் பணியாளர் சங்கம் கூட்டமைப்பு கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெற வேண்டும் என்ற திட்டத்தினை ஏற்க மறுத்து தூத்துக்குடியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட மேலாளார் ஐயப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நிர்வாகத்தால் நியமிக்கப்படும் காலி பாட்டில் எடுக்கும் ஏஜென்ட், பார் ஒப்பந்ததாரர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் காலி பாட்டில் சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் கடை பணியாளர்களை எந்த நிர்பந்தமும் செய்யக்கூடாது. காலி பாட்டில் திரும்ப பெரும் ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளர் அந்தந்த கடை எண் உள்ள ஸ்டிக்கர்களை கடை பணியாளர்களிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். பார் ஒப்பந்ததாரர் அன்றைய தினத்தில் வழங்கும் ஸ்டிக்கருக்கான தொகையினை மறுநாள் கடை திறந்த பின்பு வழங்கப்...