SHYAM NEWS
28.07.2025
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய ஆவண படுகொலை!
தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின் இவர் தன் காதலியின் அழைப்பின் நம்பிக்கையில் நெல்லைக்கு சென்ற கவியின் காதலியின் தம்பி நேற்று (27.07.2025)ஆவண படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் சாதீய ஆணவத்தால் கொல்லப்பட்ட மென் பொறியாளர் கவின்,
யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்,
மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்.
அப்பா சந்திரசேகர் நிலக்கிழார் (விவசாயி), அம்மா செல்வி ஆசிரியை.
தாத்தா செல்லத்துரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
ஆறுமுகமங்கலம் எனும் சிறிய தாமிரபரணி பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்ற கிராமம்.
அவர் பேசிப் பழகிய பெண்ணின் தாயும், தந்தையும் போலிஸ்.
பெண் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவர்.
பெண்ணின் தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9 ஆம் அணியில் சார்பு ஆய்வாளராகவும்
பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணி சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தம்பி, சுர்ஜித் என்ன படித்துள்ளார், என்ன வேலை தகவல் தெரியவில்லை.
படிப்பிலும், பொருளாதார வசதியிலும், மாத வருமானத்திலும் கொலையான கவின் குடும்பம் ஒசத்தியாகத்தான் இருக்கிறார்கள். சுர்ஜித் குடும்பத்தை விட. அப்படி இருந்தும் ஆவண படுகொலை நடைபெறுகிறது என்றால் அது ஜாதி வெறியை தான் காட்டுகிறது என்றும்.
வறட்டு சாதீய வெறிக்கு சுர்ஜித் அடிமையாகி,தனது அக்காவின் பேச்சு நட்பா, காதலா என்று கூட சிந்திக்கும் மனநிலை கூட இல்லாமல்,சமூக ஊடகங்களின் சாதீய போதையால் கவிதை ஆவண படுகொலை செய்துஇரண்டு குடும்பத்தின் வாழ்க்கையையும் கெடுத்து விட்டார்.
இது தனிநபர் பிரச்சனையல்ல.சோத்துக்கு வழியில்லாமல் சாதீயப் பெருமை பேசித்திரியும் சமூகத்தின் குற்றம் என்றும்
எல்லாப் பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே பார்க்கும், வாட்ஸ்அப் குழுக்களில் சாதி சார்ந்து இயங்கும் காவல்துறையின் குற்றம் என்றும்
எத்தனையோ சாதீ ஆணவப் படுகொலைகள் நடந்தாலும், பொதுச் சமூகத்தின் கவனம் பெற்ற, கண்ணகி - முருகேசன், சங்கர் (கெளசல்யா), கோகுல்ராஜ், இளவரசன் படுகொலைகளில் கூட நீதியைப் பெற்றுத்தர வக்கற்ற ஆளுங்கட்சிகள், ஆட்சியாளர்களின் குற்றம் என்றும்
ஆவண படுகொலை செய்யப்பட்ட கவின் உறவினர்கள் கொலை செய்த சுர்ஜித் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் தந்தை தந்தை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும். காவல்துறையினர் ஆவண படுகொலைக்கு உதவியாக இருப்பதாகவும் கவின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முக்காணி ரவுண்டானா அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படாமல் சுமார் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் பின் காவல்துறை சார்பாக 24 மணி நேரத்திற்குள் ஆவண படுகொலைக்கு ஆதரவாக இருந்த சுர்ஜித்தின் தாய் தந்தை ஆகியோரை கைது செய்து விடுவோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை ஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து கொலை செய்து வருவதாகவும் காவல்துறை அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் இதுவரை ஆவண படுகொலை செய்யப்பட்ட யாருக்கும் சரியான நீதி கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வரை கவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் கூறினர்.