ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஷ்யாம் நீயூஸ் 27.04.2023 ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று 300 பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் மகாராஜன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் ஸ்டெர்லைட் மாதிரியான ஆலைகளை திறக்கவே முடியாது சுற்றுப்புற சூழலுக்கு பயங்கரமான கேடு விளைகின்ற ஆலை இந்த ஸ்டெர்லைட். இந்த ஆலையானது தாமிரம் ,கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்றவற்றை தயாரிக்கிறது இவற்றை தயாரிக்கும் போது ஒரு டன் தாம்பரம் தயாரிப்பதற்கு இரண்டு கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது அப்படி வெளியேற்றப்படும் போது காற்றில் கலக்கிறது அதை போல் மூன்று டன் திடக்கழிவு வெளியேறுகிறது திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை என்றால் நீர் மேலாண்மை பாதிப்படைய செய்யும் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ...