முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கு அன்னதாம்,

 ஷ்யாம் நீயூஸ்  31.08.2021 ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கு அன்னதாம் வழங்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் கட்சி  சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ வின் 38வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்  30.08.2021 அன்று  கொண்டாடினர்.இதனை முன்னிட்டு  தூத்துக்குடி காங்கிரஸ்  தொழிலாளர் தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் தலமையில் தூத்துக்குடியில் உள்ள பிளசிங் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு  மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது   இதில் டி.ஜெயக்கொடி (அமைப்புசாரா தொழிலாளர்)காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ராஜப்பன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். 

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

 தூத்துகுடியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.  டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் ஓய்வூதிய சட்டபடி ஓய்வூதியம் வழங்கிடவும் இ எஸ் ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும்  தூத்துக்குடியில் மாவட்டத்தில் பணிபரியும் அனைத்து பணியாளர் மற்றும் பொதுமக்களிடமும் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் இயக்கத்தை நடத்தினர். 22.08.2021 முதல் 28.08.2021 வரை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெத்துகளை வரும் .01.09.2021 அன்று அனைத்து மாவட்டத்தில் இருந்தும் தபால் மூலம் முதல்வருக்கு அனுப்பி வைக்கபடும் என்று டாஸ்மாக்  ஏஐடியூசி மாநில துணைதலைவர் நெல்லை நெல்லை நெப்போலியன் தெரிவித்தார். உடன் தூத்துக்குடி டாஸ்மாக் ஏஐடியூசி நிர்வாகிகள் காளிமுத்து, ராஜபாண்டி மற்றும் சகாயம் உடனிருந்தனர். மேலும் நெல்லை நெப்போலியன் கூறுகையில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜப்பான் மீது பல்வேறு புகார்கள் உள்ளன அவர் மீதான புகார்களை விரைவாக விசாரணை செய்திடவேண்டும் என வரும் 6ம் தேதி தூத்துக...

தூத்துக்குடி வ உ சி கல்லுரி தேசிய அளவில் 68 வது இடம் பிடித்து சாதனை -தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவிப்பு !

  ஷ்யாம் நியூஸ்  12.08.2021 தூத்துக்குடி வ உ சி கல்லுரி தேசிய அளவில் 68 வது இடம் பிடித்து சாதனை -தேசிய தர நிர்ணய கட்டமைப்பு அறிவிப்பு ! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரின் மைய பகுதியில் அமைத்துள்ள  வ உ சிதம்பரனார்  கல்லுரி இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் 68 வது இடத்தை பிடித்துள்ளது .  வ உ சிதம்பரனார்  கல்லுரி 70 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையை செய்துவருகிறது . வ உ சிதம்பரனார்  கல்லுரி கல்வி துறையில்  பல சாதனைகளை செய்து வருகிறது .இந்தியளவிலான  கல்வி தர நிறுவனகளும் மற்றும் தனியார் தர நிறுவனங்களும் வ உ சிதம்பரம் கல்லுரியின் தரத்தை பாராட்டி பல விருதுகளை வருடம்தோறும் வழங்கி வருகின்றன . இந்திய நாட்டின் கல்வி நிறுவங்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் NIRF நிறுவனம் (தேசிய தர நிர்ணய கட்டமைப்பு )2020 ஆம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியின் கல்வி தரம் சார்ந்த பணிகளை தர  நிர்ணயம் செய்து இந்திய அளவில் 68 ஆம் இடம் கொடுத்துள்ளது . 2021 ஆம் ஆண்டு இந்திய அளவில் 1559 கல்லூரிகளை  தர நிர்ணயம் செய்ததில் வ உ சிதம்பரம் கல்லூரி முதல் பத்து இ...

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மிதக்கும் மனித உடல்!

 ஷ்யாம் நீயூஸ்  10.08.2021 தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மிதக்கும் மனித உடல்! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தில் ஒரு மனித உடல் மிதந்த நிலையில் உள்ளன.இதனை அறிந்த கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி  ராஜலட்சுமி காவல்துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு  தகவல் தெரிவித்தார்.உடலை மீட்ட சிப்காட்  தீயணைப்புத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை காவல்துறைனிடம் ஒப்படைத்தனர்.உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் எஸ்.ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.இறந்த நபர் பெயர் சுடலைமணி(40) த/பெ முத்துவீரன் இவர் கோரம்பள்ளம் ஸ்ரீனிநகரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.