தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணள்ளி போட்டுவிட்டு பேட்டி பெட்டியாக மது கடத்தல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைகளில் பல லட்சம் பணம் ?
ஷ்யாம் நியூஸ்
05.04.2021
தேர்தல் ஆணையம் கண்ணில் மண்ணள்ளி போட்டுவிட்டு பேட்டி பெட்டியாக மது கடத்தல் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைகளில் பல லட்சம் பணம் ?
நாளை ;நடைபெற உள்ள சட்டமற்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4,5,6 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது .மூன்று நாள் விடுமுறை என்பதால் மது பிரியர்கள் மூன்று நாட்களுக்கு தேவையான மது புட்டிகளை வாங்க மது கடைகளில் அலைமோதினர் .ஆனால் டாஸ்மாக் நிர்வாகமோ ஒருமதத்தில் நடைபெற்ற மது விற்பனையில் ஒரு நாளுக்கு வரும் சராசரி விற்பனையில் 30% மட்டுமே அதிக விற்பனை செய்யலாம் மீறினால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அணையை வெளியிட்டது
ஆனால் நடந்ததோ வேறு இதை சாதகமாக பயன்படுத்திய டாஸ்மாக் அரசியல் தொழிற் சங்க தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்பார்வையாளர்களிடம் அதிகம் விரும்பி பார்க்கும் குறைந்த விலை மது புட்டிகளை விற்பதை நிறுத்திவிட்டு 90 நாட்களுக்கு மேல் உள்ள பழைய விலை உயர்வான மது புட்டிகளை விற்பனை செய்ய வற்புறுத்தியுள்ளனர் .இதன் காரணமாக ரூபாய் 120 உள்ள மது புட்டிகள் கடைகளில் இல்லை என கூறி மது பிரியர்களை விலை உயர்வான மது புட்டிகளை வாங்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர் . மற்றும் மலை 6 மணிக்கெல்லாம் விற்பனை கணக்கு எடுக்கப்பட்டு ஒருநாளுக்கு வரவேண்டிய சராசரி விற்பனை பணத்தை கணக்கிட்டு தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக அரசு ஆணையில் கூறப்பட்ட 30% விற்பனை பணத்தை கூட்டி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் சீல் வைத்த கவரில் ஒப்படைத்துள்ளனர் .
அதன் பின் இரவு நேரத்தில் குறைந்த விலை மது பெட்டிகளை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு ஒரு மது பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் கூடுதலாக விலை வைத்து பெட்டியை கொடுத்து அனுப்பியுள்ளனர் .இதன் மூலம் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஒரே நாளில் பல லட்சம் சம்பாதித்துள்ளனர் .
சராசரி விற்பனையை விட 5 மடங்கு கூடுதல் விற்பனை பணத்தை தற்போது கையில் வைத்திருக்கும் மேற்பார்வையாளர்கள் தேர்தல் முடிந்த 7 தேதி விற்பனை என்று வரும் 8 ம் தேதி வங்கியில் செலுத்த திட்டமிட்டுள்ளனர் .
தேர்தல் சுமுகமாக நடை பெற வேண்டும் என்பதற்ககாக தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைளை எடுத்தாலும் இன்று 120 ரூபாய் மது புட்டிகள் 250 ரூபாய்க்கு கள்ள சந்தையில் விற்கப்படுவதாக மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர் .
மற்றும் டாஸ்மாக் கடை திறக்கும் 7 ம் தேதி 12 மணிக்கு முன்பாக அணைத்து டாஸ்மாக் கடைகளையும் சோதனை செய்தால் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பார் உரிமையாளர்களுக்கு குறைந்த விலை மது பெட்டிகளை கடத்தியது தெரியவரும் என தகவல் தெரிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .