ஷ்யாம் நியூஸ் 17.11.2020 தூத்துக்குடியில் நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு! தூத்துக்குடியில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தண்ணீரீல் மிதந்து வருகிறது. தூத்துக்குடியின் மத்திய பகுதியில் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் நீதிபதிகள் அரவது குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் அரசு மருத்துவமணை, நீதிமன்றம், நீதிமன்ற குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த ஆண்டும் பெய்த மழையில் இந்த நீதிபதி குடியிருப்பு நீரில் மூழ்கியது அப்போது பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் 13.5 லட்சம் செலவில் தண்ணீர் வெளியேற்றப்பெற்று மீண்டும் தண்ணீர் தேங்காதபடிக்கான வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது .ஆனால் 13.5 லட்சம் வேலை நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை மாறாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான அளவில் நீதிபதிகள் குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கிறது இந்திய அரசியல் சாசனம் படித்த நீதிபதிகள் குடியிருக்கும் நீதி அரசர்களுக்கே இந்த நி...