முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டி

 ஷ்யாம் நியூஸ் 26.08.2020 தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டி தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வரும்போது மாநகராட்சியின் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறும் என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள், கால்வாய் மற்றும் பூங்காக்கள் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு ரூ.6.28 கோடி மதிப்பிலான கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பூங்கா,2 அறிவியல் பூங்கா ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மாநகராட்சி மழைகாலம் வருவதற்கு முன்பு திட்டப்பணிகளை தூரிதமாக முடுக்கிவிடுவதற்கு அதிகாரிகளை அறிவுறுத்துவதற்காக வந்துள்ளேன். பல்வேறு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் முழுமையாக முடிப்பதற்கு சில காலம் ஆகும்.  அப்போது  செய்தியாளர் கூறிக்கிட்டு, ஸ்மார்ட் சிட்டி பணிகளைத் தவிர மாநகராட்சியில் வ...

தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் : பொதுமக்கள் அவதி!

 ஷ்யாம் நியூஸ் 17.08.2020 தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை  குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் :  பொதுமக்கள் அவதி! தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கால்டுவெல்காலனி பகுதியில் 26AA015 கடை எண் கொண்ட நியாவிலை கடையானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல்  நியாயவிலைக் கடையில் மின்னணு குடும்ப அடைகள் ( ஸ்மார்ட் கார்டு)  மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.கடையில் இருக்கும் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் ஸ்மார்ட் கார்டை ஸ்வைப் செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ,கால்டுவெல் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில் இதுநாள் வரை அங்கு மின் இணைப்பு இல்லாமலே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.இதனால் நியாவிலை கடை ஊழியர்கள் வீட்டிற்கு முந்தைய தினம் மிஷினை கொண்டு சென்று சார்ஜ் செய்து எடுத்து வந்து பொருட்களை வழங்கி வருகின்றனர்.ஆனால் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் நாள் முழுவதும் மின்சேமிப்பு நிற்காமல் அனைந்து விடுகிறது.இதனால் நாள் ஒன்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அட்டை தாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கக்கூடிய நிலை ஏற்...

தூத்துக்குடியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ்  17.08.2020 தூத்துக்குடியில்  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு ! இன்று காலை தூத்துக்குடி புதிய  நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அணைத்து டாஸ்மாக் சங்க குழு உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்  ஆண்டுக்கு 33ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்   ஈட்டி தரும்  அரசு நிறுவனம் டாஸ்மாக் ஆகும் .இந்த நிறுவனத்தின் மூலம் தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை  இன்று வரை அரசு பணி நிரந்தரம் செய்யாமல் தொகுப்பு ஊதியம் பெரும் தொழிலாளர்களாவே வைத்து வருகிறது.அதில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்ய  அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என  நீண்ட  நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றினைந்து இன்று புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்களை நிரந்தர படுத்தவேண்டு...

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பயங்கர தீ... பஞ்சாயத்து தலைவர் அலட்சியம்!

ஷ்யாம் நியூஸ் 12.08.2020  தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பயங்கர தீ... பஞ்சாயத்து தலைவர் அலட்சியம்! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாகபுரம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தீ பிடித்து எரிந்தன.காட்டுக்குள் எரிந்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நல்லதம்பி  மருத்துவமனை வரை பரவியது.தகவல் அறிந்த அய்யனடைப்பு கிராம நிர்வாக அலுவலர் திபலெட்சுமி தகவலின் பெயரில் சிப்காட் தீ அணைப்பு படையினர் அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் தீயை அணைத்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தீ பிடித்து எறிந்து கொண்டு இருந்து.அப்போது அப்பகுதி பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மற்றும் காய்ந்த சருகுகள் அதிக அளவு உள்ளது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பஞ்சாயத்து தலைவர் அதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை அதனால் ஏற்பட்ட தீ தான் இது என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர் நல்லவேலையாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.