தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் ஜாதி சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் !
ஷ்யாம் நியூஸ் 31.10.2019 தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் ! தூத்துக்குடியில் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கதின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிபிகாட் வளாகத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி தொழிற்சங்க உறுப்பினர்கள் கொடி ஏற்றினர் .உழைக்கும் தொழிலார்களுக்கு அவர்களின் உரிமையை நிலைநாட்டவும் தொழிலார்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவும் ஏ ஐ டி யு சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது .தொழிலார்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தாய் சங்கம் இது . டாஸ்மாக் நிர்வாகம் தொழிற்சங்கங்கள் உருவாக்க கூடாது என பணியாளர்களை மிரட்டும் நேரத்தில் அதற்க்கு அஞ்சாமல் தமிழகத்திலே முதன் முதலாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யு சி சங்கம் ஆகும் பணியாளர் நலனுக்காக தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்தனர் .எட்டயாபுரம் பகுதி பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணாமல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ...