ஷ்யாம் நியூஸ் 12.08.2019 தூத்துக்குடி பேருந்து நிலையம் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆய்வு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பழைய பேருந்து நிலையப் பணிகளை கனிமொழி எம்பி, கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை பிரிவில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், நோயாளிகளின் தேவைகள், குறைகளை கேட்டறிந்தனர். முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்த கனிமொழி எம்பியை மருத்துவ கல்லூரி முதல்வர் ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் இன்சுவை, டாக்டர் பாலவன் மற்றும் மருத்துவர்கள் வரவேற்றனர் தொடர்ந்து அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்மார்ட்...