24/08/2018 இல் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் தங்கள் திறமையை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உரையில் மாணவர்கள் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் நடை உடை பாவனைகளை சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் கல்லூரி தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற வேண்டும் என்றும் ஆங்கில பேச்சு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மேலும் விளையாட்டு ஓவியம் போன்ற தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் வருங்கால வேலைவாய்ப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் உள்ளூரில்தான் வேலை பார்ப்பேன் என்ற மனநிலையை மாற்றி அரசு வேலை மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து தங்களது அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வில் நீங்கள் பேசும் முதல் வார்த்தைதான் உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும் என்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கல்லூரி பேராசிரியர் பேசும்போது நமது மாவட்ட ஆட்சி தலைவர் முதலில் விற்பனை பிரதிநிதியாக இருந்து கொண்டே படித்து மாவட்ட ஆட்சி தலைவராக உயர்ந்துள்ளார் என்று உரையாற்றி முடிக்கும்போது மாணவர்களின் கரவோசம் நிற்க சில நிமிடங்கள் ஆனது இதில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர் .