முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு 25க்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

 ஷ்யாம் நீயூஸ் 20.07.2024 தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு 25க்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி! தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில் உள்ள நிலா சீ புக்ஸ் என்ற தனியார் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 25க்கும் அதிகமான‌ பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று(19.07.2024) இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகள...

கோரம்பள்ளம் குளம் உடைப்பு அடைப்பில் ஊழலா?.மீண்டும் தூத்துக்குடியை வெள்ளம் சூழும் அபாயம்!

 ஷ்யாம் நீயூஸ் 06.07.2024 கோரம்பள்ளம் குளம் உடைப்பு அடைப்பில் ஊழலா?.மீண்டும் தூத்துக்குடியை வெள்ளம் சூழும் அபாயம்!  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் காலான்கரை அருகே  ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தூத்துக்குடி முழுவதும் வெள்ளத்தில் மிதந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். பலர் தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் இழந்தனர்.  தற்போது இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனர். மீண்டும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோரம்பள்ளம்  குளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க  தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இந்தப் பணி தற்போது இரவோடு இரவாக போதிய வெளிச்சம் இல்லாமல் லாரியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் முட்டு அளவு நீரில் தண்ணீரை வெளியேற்றாமல் சிமெண்ட் கலவையை கொட்டி கட்டுமான பணி நடைபெறுவதாகவும் இதன் உறுதித் தன்மை நம்ப முடியும் அளவில் இல்லை என்பதாலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மழை காலம் ஆரம்பமா...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் போராட்டம் !

 ஷ்யாம் நீயூஸ் 02.07.2024 தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் போராட்டம் ! தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி வாசலில் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் காமராஜ் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளையடித்து வருகின்றனர் கல்வித்தந்தை காமராஜரின் பெயரில் கல்லூரி வைத்துக்கொண்டு கல்வியின் பெயரில் கொள்ளை அடித்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய மாணவர்களில் கல்வி கனவை சிதைத்திடும் கல்வி கட்டணத்தை குறைத்திட வேண்டும் கல்வி  கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் ஸ்டுடென்ட் யூனியன் சிந்தாபாத் முழக்கங்கள் இட்டும் சமூக நீதி பேசும் ஸ்டாலின் அரசு தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றும் அதிக கட்டணத்தை தடுத்து நிறுத்தி  குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கும் அதிகம் கட்டண வசூலிக்கப்படுவதாகவும்  ரெகுலர் மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர்கள் எஸ் எப் ஜ மாணவர் சங்க நிர்வாகிகள் தலமையில்  வாசல...