SHYAM NEWS 20.02.2024 ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை என வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது. தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள...