ஷ்யாம் நியூஸ் 30.08.2023 தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை! தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று(30.08.2023) மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி பேசுகையில்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஜாதியின் பெயரில் எந்த சாலையும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களை உடனடியாக தேசதலைவரின் பெயரில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தூத்துக்குடி 51 வது வார்டில் செயல்பட்டு வரும். இரண்டு டாஸ்மார்க் கடைகளையும் அகற்றி மது இல்லாத வார்டாக 51 வது வார்டை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி மாநகர பகுதியில் மதுவால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் குடும்பம...