ஷ்யாம் நீயூஸ் 23.12.21 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் ராஜ்யசபா எம்பி குற்றஞ்சாட்டு! உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் ஆதிக்கம் இருப்பதாக ராஜ்யசபாவில் கேரளாவை சேர்ந்த புதுமுக எம்.பியான ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார். கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் புதுமுக எம்.பி.யுமான ஜான் பிரிட்டாஸ் ராஜ்யசபாவில் பேசியதாவது: இந்தியாவில் இதுவரை 47 பேர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் 14 பேர் பிராமணர்கள். பிராமணர் ஆதிக்கம் 1950-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 14 பேரில் 11 பேர் பிராமணர்கள். 1980-ம் ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாமல் போனது ஏன்? உலகத்திலேயே நீதிபதிகள் நியமனம் இந்த அளவு ரகசியமானதாக எங்கேனும் இருக்கிறதா? நீதித்துறையின் சுதந்திரத்தை தற்போதைய நீதிபதிகள் நியமன முறை (கொலீஜியம், கொலிஜியம்) கேள்விக்குள்ளாக்குகிறது. தகுதியான நீதிபதிகளை கண்டறிந்து நியமிக்க நீதித்துறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீதிபதி ...