முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒன் டைம் செட்டில்மென்ட் க்கு ஆசைபட்ட தூத்துக்குடி பிஷப் விரைவில் டிஸ்மிஸ்?

 ஷ்யாம் நீயூஸ்  24.10.2021 ஒன் டைம் செட்டில்மென்ட்  க்கு ஆசைபட்ட தூத்துக்குடி  பிஷப் விரைவில் டிஸ்மிஸ்? தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்ததில் DSF கிப்சன் அணி வெற்றி பெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக பதவியில்  இருந்த SDKஅணி தோல்வியை தழுவியது. தோல்வியை  ஏற்றுக்கொள்ள முடியாத SDK அணியினர் பேராயர்  SEC தேவசகாயத்தை கடத்தி வைத்து பழைய லெட்டர் பேர்டில் அறைகுறையாக தட்டச்சு செய்து தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிட செய்தனர்.இந்த அறிவிப்பை எதிர்த்து வெற்றி பெற்ற DSF அணியினர் தென்னிந்திய திருச்சபை  தலைமையகம்  சினாடிடம் முறையிட்டனர். சினாடு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து என்று அறிவிக்க  பேராயருக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே உடனே மறுப்பு அறிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடும்படி அறிவுறுத்தியது. மேலும் பேராயரை DSF அணியினர் வெற்றி பெற்றது செல்லும் என அறிவித்து வெற்றி பெற்ற அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் சினாடு அறிக்கையை  மதி...

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் டி.எஸ்.எப். அணியினர் வெற்றி.!

 ஷ்யாம் நீயூஸ்  20.10.2021 தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் டி.எஸ்.எப். அணியினர்  வெற்றி.!                      தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் இன்று  நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் கல்லூரியில்  காலை 9 மணி அளவில் தொடங்கிய வாக்களிக்கும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது.           இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பின்னர் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் டி.எஸ். எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றனர். நாசரேத் திருமண்டல லே செயலாளராக கிப்சன் மற்றும் அவரது அணியை சார்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், டி.எஸ்.எப் ஆதரவாளர்கள் உற்சாகம் அ...

தூத்துக்குடியில் அ தி மு க வின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி நலதிட்டம் வழங்பட உள்ளது .

 தூத்துக்குடியில் அ தி மு க வின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி  நலதிட்டம் வழங்பட உள்ளது . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 50 வது ஆண்டுவிழா கொண்டாடும் வகையில் தெற்கு மாவட்ட  தூத்துக்குடி அதிமுக செயலாளர் சண்முகநாதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் மத்திய வடக்குபகுதி எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் B.திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 39 வது வார்டு பொதுமக்களுக்கு நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. வடக்கு ரத வீதி D.A திருமணமண்டபத்தில் வரும் 26.10.2021 மாலை 6மணியளவில் நடைபெறும் விழாவில் 170 பெண்களுக்கு சேலையும் 50 ஆண்களுக்கு வேஷ்டியும்  20நபர்களுக்கு இஸ்திரி பேட்டி மற்றும் தையல் எந்திரமும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவரும் பொதுமக்களுக்கு அன்னதாம் தானம் வழங்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.