முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ்!

 ஷ்யாம் நியூஸ் 31.01.2021 போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ்!  போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் கலந்துகொண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ்.  ஜனவரி 31போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது பெற்றது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில் தூத்துக்குடி ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு 5வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி ஆரம்பித்து வைத்தார். மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1221 மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் 3164 பணியாளர்கள் களப்பணி ல் உள்ளனர் 134 வாகனங்கள்ஈடுபட்டுள்ளது மாவட்டம் முழுவதும் உள்ள 135537 குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் மற்றும் பொதுமக்கள் கூடும்பஸ்நிலையம் போன்ற இடங்களிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார இதில்...

ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு!

  ஷ்யாம் நியூஸ் 28.01.2021 ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு!   காந்தி இறந்த தினமா ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நடத்தவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியில் தேசிய பாப்புலர் ஃபிடண்ட் தினமாக கொண்டாடி வருகிறார்கள் அது போன்று இந்த ஆண்டும் அன்றைய தினத்தில் கொடியேற்றி நல திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஒற்றுமை பேரணி மற்றும் பொது கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  மற்றும் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில்   நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்  மாவட்ட தலைவர் திப்பு சுல்தான் கூறுகையில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுமை  சட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி செயல்படுவது டன் மட்டும் அல்லாமல்   அறவழியில் போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு அடக்குமுறை...

திருமண ஆசை காட்டி தமிழக இளைஞர்களை ஏ மாற்றும் கேரள புரோக்கர்கள்!

   ஷ்யாம் நீயூஸ் 22.01.2021 திருமண ஆசை காட்டி தமிழக இளைஞர்களை ஏ மாற்றும் கேரள புரோக்கர்கள்! இன்னைக்கு 30 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் அதுவே பெரிய சாதனை. அன்னைக்கெல்லாம் சம்பளம் முக்கியம் இல்ல, சொந்த வீடு கூட முக்கியம் இல்ல, பையன் நல்லா இருந்தா போதும், கண்ணை மூடிக்கொண்டு பெண்ணை கையில் ஒப்படைத்து விடுவார்கள். இன்னைக்கு சொத்து வேண்டுமாம், வருடத்திற்கு 5 இலட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்க வேண்டுமாம். எல்லாம் சரியாக இருந்தால், ஜாதகம் அக்யூரெட்டா பொருந்தி வரணுமாம். கட்டம் 7,8ல் எதிர்பார்த்த கிரக அமைப்பு இல்லை என்று சொல்லியே என் தோழியின் குடும்பம் நல்ல நல்ல வரன்களை எல்லாம் நிராகரித்துவிட்டனர். இப்படியே போனால், 35 வயதுக்குள்ளாவது கல்யாணமாகி விடுமா? என்ற ஏக்கத்தில், நம்ம பசங்க ஏங்கித்தவிக்கிறாங்க. கரெக்டா சூழ்நிலையை புரிந்து கொண்ட, மேட்ரிமோனி சைட்டுகள், கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. பல ஆயிரம் கோடி புழங்கும் தொழிலாக மேட்ரிமோனி பிசினஸ் மாறியிருக்கிறது. தெருவுக்கு தெரு தடுக்கி விழுந்தால், ஒரு திருமண புரோக்கர் ஆபீஸ் முன்பு எந்திரிக்கலாம். அந்த அளவுக்கு திருமண புரோக்கர் பிசினஸ...

தூத்துக்குடியில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் !

 ஷ்யாம் நியூஸ்  22.01.2021 தூத்துக்குடியில்  வேளாண்மை சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் ! வேளாண்மை சட்டத்தை இயற்றிய மத்திய அரசை எதிர்த்தும் அதற்க்கு ஆதரவு கொடுத்த அ திமுக அரசை கண்டித்தும் தூத்துக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சினர் நேற்று மாலை தூத்துக்குடி வி வி டி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . வேளாண்மை தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது .எனவே குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்றவேண்டும் .மாநில உரிமைகளை பறிக்கும் செயலை மைய அரசு கைவிடவேண்டும் .வேளாண் விரோத திருத்த சட்டம் மூன்றையும் ரத்து  செய்ய வலியுறுத்தியம் விடுதைலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழகம் எங்கும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  நேற்று தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கா .மை .அகமது இக்பால் தலைமை தாங்கினார் . வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான் மற்றும் தொகுதி செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் பலர் கலந்துகொண்டனர் .