ஷ்யாம் நியூஸ் 24.12.2020 அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார் தூத்துக்குடி தி. மு. க, எம் எல் ஏ கீதா ஜீவன் ! தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் பிரசார பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று மாலை தூத்துக்குடியில் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கீதாஜீவன் எம்எல்ஏ தனது பிரசாரத்ததை தொடங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி 7வார்டுகளில் பிரச்சார பயணம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏயுமான கீதாஜீவன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவிலி தொண்டர்களோடு சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரசாரத்தை தொடங்கினார். மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, கீதாஜீவன் எம்.எல்.ஏ., பேசியதாவது, கடந்த 10ஆண்டு காலமாக தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை. இதனால் மாநகராட்சியே சீர்...