ஷ்யாம் நீயூஸ் 05.12.25 ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு நூதன தண்டனை. ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தூத்துக்குடி மாவட்ட இளம் சிறார் நீதி குழுமம். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா(45). இவர் கல்லூரணி ஊர்த்தலைவராக இருந்துள்ளார். கடந்த 12.08.2008 அன்று கல்லூரணி ஊரில் உள்ள காளியம்மன் கோவில் கொடைவிழாவின் போது, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன் என்ற குச்சிமுருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனை சுப்பையா கண்டித்து உள்ளார். தொடர்ந்து ஊர் கூட்டத்திலும் 3 பேரையும் சுப்பையா கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், கடந்த 14.08.2008 அன்று சுப்பையா, அவரது மகன் ராஜாவுடன் குளத்தூர்-கல்லூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையா...