முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

த வெ க தலைவர் விஜய் மீது அவதூறு செய்தி புகார்! தூத்துக்குடி சைபர் க்ரைம் போலிஸ் விசாரணை !

ஷ்யாம் நீயூஸ் 09.12.2024  த வெ க தலைவர் விஜய் மீது அவதூறு செய்தி புகார்!  தூத்துக்குடி சைபர் க்ரைம் போலிஸ் விசாரணை ! தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்  குறித்து தனியார் youtube சேனலில் (MY INDIA 24x7) விஜய் விபச்சார அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்காமல் திமுகவை மட்டும் விமர்சிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவின் மொத்த ஏஜெண்டாக விஜய் மாறி உள்ளார். லண்டனில் வைத்து அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேசி உள்ளார் என்றும் உள்நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் இந்த சேனலால் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர். வதந்தியை பரப்பிய இந்த தனியார் youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினராகவும், சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன்  காவல்துறை இயக்குனர், நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருந்தார். இதன...

தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா

 ஷ்யாம் நீயூஸ் 08.12.2024 தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா! டிசம்பர் மாதம் வந்ததும் நினைவில் வருவது கிறிஸ்து பிறப்பு விழா தான். அவ்வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவராலும் பல்வேறு நிலைகளில் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் விழா கச்சனா விளை குழந்தைகள் காப்பகத்தில் (06-12-2024) நடைபெற்றது. இறைவேண்டலுடன் நிகழ்ச்சி துவங்க, பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மைக்கிலின் மேரி வரவேற்க, பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை பென்சிகர் லூசன் தலைமை தாங்கினார். காப்பகத்து குழந்தைகள் மகிழும்படியான நடனங்கள், பாடல்கள் நாடகங்கள் என கலை நிகழ்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி, அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டு விழா நிறைவுற்றது.சுமார் 75 குழந்தைகள் உள்பட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இல்லத்து அருட் சகோதரிகள் நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்...

யானைப்பாகனுக்கு ஒரு நீதி! டாஸ்மாக் ஊழியருக்கு ஒரு நீதியா?!!!

 ஷ்யாம் நீயூஸ் 07.12.2024 யானைப்பாகனுக்கு ஒரு நீதி! டாஸ்மாக் ஊழியருக்கு ஒரு நீதியா?!!! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உதவி  யானைப்பாகன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் உறவினரை யானை இருக்கும் இடத்திற்கு 18.11.2024 அன்று அழைத்து சென்று செல்பி எடுத்தபோது யானை தாக்கி இருவரும் உயிரிழந்தனர். பாகனின் குடும்ப வாழ்வாதார சூழ்நிலையை கருதி அரசு நிதியும் வழங்கி யானைப்பாகன் மனைவிக்கு அரசு பணி நியமன ஆணையும் இன்று (07.12.024) வழங்கியுள்ளது.ஆனால் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது விழுப்புரம் மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கடைகளில் தண்ணீர் புகுந்துள்ளதா சேதாரம் ஏதும் மேற்பட்டு உள்ளதா என்று கடை ஊழியர்களை கடைக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  அதை செயல்படுத்துவதற்காக 01.12.2024 அன்று சென்ற  டாஸ்மாக் கடை எண் 11405 ஊழியர் சக்திவேல் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவர் குடும்பத்திற்கு நிதி கேட்டும் அவரது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் சங்கங்கள் கோர...

தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

 ஷ்யாம் நீயூஸ் 06.11.2024 தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!  தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியின்போது  வெள்ளத்தில் மரணம் அடைந்த ஊழியர் சக்திவேல் மரணத்துக்கு நீதி கேட்டும். தமிழக அரசு சார்பில் அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டியும் அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரியும், வருங்காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு முழு பாதுகாப்பு வழங்க கோரியும் 11. 12. 2024 அன்று சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் அருகில் காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.