முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.

 ஷ்யாம் நீயூஸ் 15.10.2024 தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல். முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில் இருந்து  தூத்துக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசரமாக வரும் பொழுது  அவர்களது காருக்கு இடையூறாக வழி கொடுக்காமல் வந்ததாக கூறி ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் ஜெகன் என்பவரை சரமாரியாக இரண்டு முன்னாள் அமைச்சர்களின்  ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர் . படுகாயம் அடைந்த பாதிரியார் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய பாதிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில் உடல் குறைவால் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது...

20 சதவீதம் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

 ஷ்யாம் நீயூஸ் 14.10.2024 20 சதவீதம் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மிகை ஊதியம், கருணைத் தொகையை கூடுதலாக வழங்க கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.52 ஆயிரம் கோடி வரி வருவாயாக ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.16,800 மட்டுமே மிகை ஊதியம் கிடைக்கும் என்பதை கருத்தில்கொண்டு, மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கூடுதல் மிகை ஊதியம் வழங்கவேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ம் ஆண்டின்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21 ஆயிரம் என்பதனை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்க...