முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிப்பு -அமைச்சர் கீதா ஜீவன்.

 ஷ்யாம் நீயூஸ் 23.11.2023 அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு -அமைச்சர் கீதா ஜீவன். தமிழகம் முழுவதும் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக இரவு-பகல் என்று மழை பெய்து வருகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பொதுமக்களின் பாதிப்புகளை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் உடனடியாக களமிறங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  பேரிடர் மேலாண்மை மீட்பு குழு மட்டுமின்றி அதிகாரிகள் உள்பட அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஒவ்வ...

மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன்.

ஷ்யாம் நீயூஸ் 23.11.2023  மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் எதிர்பாராமல் பெய்த  கனமழையால் பொதுமக்கள் பல பகுதிகளில் மழைநீரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவில் அவல நிலை ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட அதே பகுதியை மீண்டும் பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இதுபோன்ற நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள், சாலை வசதிகள் செய்தும், பக்கிள் ஓடை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றப்பட்டும் பல்வேறு பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. கடந்த காலத்தில் மழை காலங்களில் ஏற்பட...