முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழைக்காலம் வருமுன் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் -தூத்துக்குடி காலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு !

 ஷ்யாம் நியூஸ்  22.09.2021 மழைக்காலம் வருமுன் ஸ்மார்ட் சிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் -தூத்துக்குடி காலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு ! தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது .அதே நேரத்தில் மழை காலமும் நெருங்கி விட்டது .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்யப்படும் வேளைகளில் கழிவு நீர் கால்வாய்கள் வேலை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது .இது  தொடர்ந்தால் மழைக்காலத்தில் தூத்துக்குடி நகரம் ;தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படும் என்றும் தூத்துக்குடி மத்திய மையவாடி பகுதியில் உள்ள குட்டைகளை அகற்றவும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு      காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவ்ராஜ் மோகன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜிடம் மனுகொடுத்தனர் மாநில ஒருங்கிணைப்பாளர்  டி .ஜெயக்கொடி ,அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் முத்துமணி ,ஊடக பிரிவு சுந்தரராராஜ் ,நிர்வாகி ராஜப்பா ஆகியோர் உடன் இருந்தனர் .

ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு !

 ஷ்யாம் நியூஸ்  06.09.2021 ஒரு கடைக்கு மாதம் பத்தாயிரம் மாமூல் கேட்ட டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி கலெக்டரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் மனு ! தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளராக ஐயப்பன் பணியாற்றி வருகிறார் .இவர் அரசு மதுபான மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக வைத்துக் கொண்டு மதுபான சில்லறை  விற்பனை கடை ஒன்றுக்கு மதம் பத்தாயிரம் மாமூல் வசூல் செய்வதாக தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யூ சி சங்கதினர்   கலெக்டரிடம் மனு அளித்தனர் .மேலும் அந்த மனுவில் மாவட்ட  மேலாளர்  மேலாண்மை இயக்குனர் உத்தரவுகளை மீறி தற்காலிக பணியிடமாற்றம் என்ற ஆணைகளை தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களிடம் விற்பனை  செய்கிறார் .கொரானா காலகட்டத்தில்  மூடப்பட்ட கடையில் மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக முதல் தகவல்  அறிக்கையில் பெயர் இல்லாத கடைப்பணியாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு தனக்கு வேண்டப்பட்ட பணியாளர்களுக்கு (கடை எண் 9970)பணி ஆணை வழங்கியுள்ளார் மற்றும் கடை மேற்பார்வையாளர்களை புரோக்கர்களாக பயன்படுத்தி அணைத்து கடைகளிலும் மாதம்தோறும் சுமார் பத்து ஆயிரம் ரூபாய்க்கு குறையா...