ஷ்யாம் நியூஸ் 10.06.2021 ஜூன் 14 முதல் தூத்துக்குடி டயோசிஸ் தேர்தல் !கொரானா பேரிடர் நேரத்தில் சாத்தியமா ? தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் வேலைகள் வரும் ஜூன் 14 ம் தேதிமுதல் நடைபெற உள்ளது .தேர்தல் விதிமுறை படி வரும் 20 தேதி தேவாலயத்தில் வாக்காளர்களின் பெயர்களை ஒட்டி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் . பின்பு போட்டியாளர்கள் மனு தாக்கல் செய்யவேண்டும் என பல பரிமாணங்களை கடந்து தலைவர்களை தேர்ந்து எடுக்கவேண்டியது உள்ளது. ஊரடங்கு நேரத்தில் கோவில்கள், தேவாலயங்கள் ,மசூதிகள் திறக்க அனுமதி இல்லாத நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது .மற்றும் தற்போது பதவியில் இருக்கும் எஸ் டி கே ராஜன் இரண்டு முறை வெற்றிபெற்று பதவியில் இருந்ததால் தேர்தல் விதிமுறைப்படி இந்த தேர்தலில் போட்டியிட முடியாது இதனால் எஸ் டி கே ராஜன் தலைமையில் வேறொருவர் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது .எதிர் அணியில் டி எஸ் எப் துரைராஜ் அல்லது அவரது மகன் கிப்ஸன் போட்டியிடலாம் என தெரிகிறது மற்றும் டி எஸ...