கொலை குற்றவாளியை தப்பிக்கவிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் உறவினர் புகார் மனு!
ஷ்யாம் நியூஸ் 30.06.2020 கொலை குற்றவாளியை தப்பிக்கவிட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி SP யிடம்புகார் மனு! முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சார்ந்த வெள்ளரிக்காய் வியாபாரி சுப்பையா என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை தப்பிக்கவிட்டதாக முத்தையாபுரம் ஆய்வாளர் அன்னராஜ் மீது சுப்பையாவின் உறவினர் STC கனியம்மாள் மாவ்ட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அளித்த புகார்மனுவில் எனது உறவினர் சுப்பையா கொலை வழக்கில் கைதுசெய்யபட்டவர்களில் முக்கிய குற்றவாளியான சித்ரா(A5) என்பவரை முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் சட்டத்திற்கு முறனாக பணம் பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டுள்ளார்.எனவே ஆய்வாளர் அன்னாராஜ் இந்த வழக்கை புலன் விசாரனை செய்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்துவிடுவார் மேலும் குற்றவாளி சித்ராவால் பாதிக்கப்பட்ட எங்களை மிரட்டும் சூழல் உள்ளது எனவே குற்றவாளி சித்ராவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அன்னராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய ஆய்வாளர...