முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது!

மாவட்ட ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில்  (29-01-2020) நடைபெற்றது. காமராஜ் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திருமதி பொன்னுத்தாய் மற்றும் முனைவர் தேவராஜ், முனைவர் நாகராஜ் உள்ளிட்டோர் வழிநடத்திய இவ்விழிப்புணர்வு கருத்தமர்வில் அவசர கால பெண்கள் உதவி மைய எண் 181ன் பயன்பாடுகள் என்னென்ன என்றும், பெண்கள் பிரச்சனை மற்றும் ஆலோசனைக்கு எவ்வாறு தொடர்புகொள்வது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள் குறித்தும்* ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகி திருமதி ஷெலின் ஜார்ஜ் அவர்கள் விளக்கமளித்தார். இக்கருத்தமர்வில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூத்த ஆலோசகர் திருமதி பொன்னுமாரி, களப்பணியாளர்கள் திருமதி பிரியாதேவி  திருமதி உமாதேவி, தொழில்நுட்ப நிர்வாகி திருமதி கவிதா லூயிஸ் உடனிருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் 200பேர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் ஏ சி வாழ்க்கையும்! பொதுமக்களின் தூசி வாழ்க்கையும் ! கடும் கோபத்தில் மக்கள் !

SHYAM NEWS தூத்துக்குடி 21.01.2020   தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரின் ஏசி  வாழ்க்கையும்! பொதுமக்களின் தூசி வாழ்க்கையும் ! கடும் கோபத்தில் மக்கள்!  தூத்துக்குடியில் கடந்த மாதம் பெய்த மழையில் தூத்துக்குடியில் உள்ள அணைத்து சாலைகளும் பழுதாகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் மக்களின் பொதுவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது . பழுதாகியுள்ள  சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்யாமல் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மெத்தன போக்கை கடைபிடிக்கிறார் .மற்றும் பலபகுதிகளில் இன்னமும் மழை நீர் வடியாமல் 60% மக்கள் இன்னலோடு வாழ்ந்து வருகின்றனர் .நீதிபதி குடியிருப்பு பகுதிகளில் மழை நீரை வெளியேற்றிய வேகம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் இல்லை .தூத்துக்குடி சுற்றி உள்ள சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு வாகனம் செல்லும்போது தூசு பறக்கிறது இதனால் பல நோய்களால் மக்கள் துன்பப்படுவதோடு விபத்துகளும் நடந்து வருகிறது .இதனால் ரோடு ஓரத்தில் உள்ள கடைகளில் தூசு படிந்த உணவு பண்டங்கள் விற்கப்படுகிறது இது பற்றிய எந்த கவலையும் படாமல் தூத்துக்குடி ஆணையர் அரசு கொடுத்த ஏ சி அறைய...