SHYAM NEWS 25.12.2019 பஞ்சயாத்து தலைவர் வேட்பாளருக்கு செலவு செய்யும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ? கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .அதனை தெடர்ந்து ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து அடைக்க உத்தரவிட்டது .அதனை தொடர்ந்து ஆலை நிர்வாகம் ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி ஆலையை திறக்க சொல்லி அவர்களை போராட தூண்டிவிட்டது அது நடக்கவில்லை .தற்பொழுது பஞ்சாயத்து தேர்தல் நடக்க இருப்பதால் ஆலையை சுற்றி உள்ள பஞ்சயாத்து தலைவர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு செய்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் .குறிப்பாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யநடப்பு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மனைவிக்கும் ஆளும் கட்சி நிர்வாகி மனைவிக்கும் சுமார் 50 லட்சம் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் இருவரில் யார் பதவிக்கு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என உடன்படிக்கை செய்து உள்ளனர் எனவும் ஸ்டெர்லைட் ஆலை எதிப்பு கூட்டமைப்புப்பை சார்ந்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் ....