SHYAM NEWS 28.07.2025 தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய ஆவண படுகொலை! தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின் இவர் தன் காதலியின் அழைப்பின் நம்பிக்கையில் நெல்லைக்கு சென்ற கவியின் காதலியின் தம்பி நேற்று (27.07.2025)ஆவண படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் சாதீய ஆணவத்தால் கொல்லப்பட்ட மென் பொறியாளர் கவின், யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம். அப்பா சந்திரசேகர் நிலக்கிழார் (விவசாயி), அம்மா செல்வி ஆசிரியை. தாத்தா செல்லத்துரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். ஆறுமுகமங்கலம் எனும் சிறிய தாமிரபரணி பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்ற கிராமம். அவர் பேசிப் பழகிய பெண்ணின் தாயும், தந்தையும் போலிஸ். பெண் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவர். பெண்ணின் தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9 ஆம் அணியில் சார்பு ஆய்வாளராகவும் பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11 ஆம் அணி சார்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருகின்ற...