முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூ.4 கோடி பணம் பறிமுதல் எதிரொலி: நயினார் நாகேந்திரன் ஓட்டல், உறவினர் வீட்டில் சோதனை

 ஷ்யாம் நீயூஸ் 08.04.2024 ரூ.4 கோடி பணம் பறிமுதல் எதிரொலி: நயினார் நாகேந்திரன் ஓட்டல், உறவினர் வீட்டில் சோதனை சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர். பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக ...

தூத்துக்குடியில் வெள்ள நீர் வடியாததால் நோய் தொற்று பரவும் அபாயம்.

 ஷ்யாம் நீயூஸ் 01.04.2024 தூத்துக்குடியில் வெள்ள நீர் வடியாததால் நோய் தொற்று பரவும் அபாயம். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பாரதி நகர் 5வது தெருவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள நீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் சாக்கடையாக தேங்கி காட்சியளிக்கிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 17 பாரதிநகர் ஐந்தாவது தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான முத்துகிருஷ்ணன் பிள்ளை நினைவு பூங்கா உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு இந்த பூங்காவில் இன்னும் வெளியேறாமல் தேங்கியுள்ளதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். மழை பாதிப்பு முடிந்து பல  மாதங்கள் ஆகியும் தேங்கிய நீரை அகற்றாமல் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக தற்போது மாறி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயருக்கு மனு ...