தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யு சி பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்றிய மேலாளருக்கு நெல்லை நெப்போலியன் வாழ்த்து !
ஷ்யாம் நியூஸ் 21.04.2021 தூத்துக்குடி டாஸ்மாக் ஏ ஐ டீ யு சி பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய மேலாளருக்கு நெல்லை நெப்போலியன் வாழ்த்து ! தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பனுக்கு டாஸ்மாக் ஏ ஐ டீ யு சி சங்க மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் . கொரானா கோரத்தாண்டவத்தால் அரசு பல கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது .பொதுமக்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கொரானாவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் சமூக இடைவெளி கடைபிடிக்கவும் மது பிரியர்கள் வரிசையில் வந்து மது வாங்கி செல்லவும் டாஸ்மாக் கடை முன்பு சாரம் அமைக்கவும் கடையை கிருமிநாசினி தெளிக்கவும் ஒலிபெருக்கி வைத்துக்கொள்ளவும் டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த லாக் டவுன் திறப்பின்போது கடை ஊழியர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தை வைத்து செலவு செய்தனர் . ஊழியர்கள் கொரானா தடுப்பிற்கு செய்த செலவினத்தை டாஸ்மாக் நிர்வாகம் கொடுக்கவேண்டும் என டாஸ்மாக் பணியாளர் ஏ ஐ டீ யு சி சங்கம் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர் .பல மேலாளர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் போன நிலை...