கேரளாவில் வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு 13.5 லட்சம் உதவிய தூத்துக்குடி முஸ்லீம் மக்கள் . 24.08.2014 தூத்துக்குடி : கடந்த வரம் பெய்த கனமழையால் கேரளாவின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது .இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் பெரும்பாலான உயிர்களையும் இழந்து துன்பத்தில் இருந்துவருகின்றனர் .நம் சகோதரர்களின் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களில் இருந்தும் உணவு மருந்து பொருட்கள் ஆடைகள் அனுப்பி வைத்து வருகின்றனர் . 24.08.2018 இன்று தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ரூபாய் 10 லட்சங்கள் மதிப்பிலானா பொருட்களையும் வெள்ளத்தால் பாதித்த வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூபாய் 3.5 லட்சம் பணமும் (காசோலை )அனுப்பியுள்ளனர் .