முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் ஏடிஎம் வைக்க பகுதி சபா கூட்டத்தில் முடிவு!

ஷ்யாம் நீயூஸ் 25.01.2025 தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் ஏடிஎம் வைக்க பகுதி சபா கூட்டத்தில் முடிவு!  இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பகுதி சபா கூட்டம் அனைத்து வாடுகளிலும் நடைபெறும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி தலைமையில் தூத்துக்குடியில் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேருந்து நிலையத்தில் புதிதாக ஏடிஎம் மிஷின் அமைக்க வேண்டும்' பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல்' பழைய பேருந்து நிலையம் இருந்தபோது உள்ள  அஞ்சல் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும்'பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடை செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தபகுதி  கூட்டத்திற்கு உதவி ஆணையர் வெங்கட்ராம் முன்னிலை வகித்தார் மாநகராட்சி அலுவலர் முத்துக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.