முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் கிறிஸ்துவ ஆலயத்தில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 24.03.2024 தூத்துக்குடியில் கிறிஸ்துவ ஆலயத்தில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு!  இன்று குருத்தோலை ஞாயிறு தினமாகும் தூத்துக்குடி பாராளுமன்ற அதிமுக வேட்பாளரான எஸ் ஆர் சிவசாமி வேலுமணி தூத்துக்குடி சிதம்பரம் நகர் சர்ச்சில் உள்ள ஆலயத்தில் பலிபீடம் வரை சென்று வாக்கு சேகரிப்பதில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட அபிஷேகநாதர் ஆலயம் சிதம்பரம் நகரில் உள்ளது இன்று குருத்தோலை ஞாயிறு என்பதால் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தங்கள் வழிபாட்டுக்காக வந்திருந்தனர் இந்த நிலையில் அபிஷேகநாதர் ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினரும் எஸ் டி கே அணியின் தளபதியுமான இரா. ஹென்றியின் உறவினருமான செயிண்ட் ரவிராஜன் அதிமுக தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் எஸ் ஆர் சிவசாமி வேலுமணியை ஆலய பீடம் வரை அழைத்து சென்று ஆலய மக்கள் ஒவ்வொருவரிடமும் வாக்கு சேகரித்தனர்.   இன்று ஒரு புனித நாள் என்பதால் இந்த நிகழ்வு ஆலய மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.